விக்கிபீடியாவில் விநோதம்குரங்கு எடுத்த செல்பி படம் பதிப்புரிமை அதற்குதான் சொந்தம்கருத்துகள்![]()
How to get rid of wrinkles
![]()
நியூயார்க்: இந்தோனேசியாவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு சென்றவரின் கேமராவில் தன்னைத் தானே (செல்பி), கருப்பு மகாவ் குரங்கு எடுத்த புகைப்படத்துக்கான பதிப்புரிமை அந்த குரங்குக்கே சேரும் என்று விக்கிபீடியா கூறியுள்ளது. தன்னுடைய கேமராவை பிடுங்கிய குரங்கு, அதில் தன்னைத் தானே படம் எடுத்துக் கொண்டது. கேமரா என்னுடையது, அதனால் புகைப்படத்துக்கான உரிமையும் என்னுடையது என்று அதன் உரிமையாளர் கோரி வருகிறார். இந்த விநோத சம்பவம்: டேவிட் ஸ்லேட்டர் என்ற புகைப்படக்காரர் இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கடந்த 2011ம் ஆண்டு சென்றுள்ளார். மிகவும் அரியதான கருப்பு மகாவ் குரங்குகளை பார்த்துள்ளார். ஊழியர்கள் உதவியுடன், அந்த குரங்குகள் இடத்துக்குச் சென்று தொடர்ந்து 3 நாள்கள் தங்கி அவற்றுடன் பழகியுள்ளார்.
அவர் கொண்டு சென்ற கேமராவை பறித்த ஒரு குரங்கு, தவறுதலாக அதை இயக்கியது. இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை அது எடுத்துள்ளது. ஸ்லேட்டரையும் அந்த குரங்கு படமெடுத்தது. பிறகு தன்னைத் தானே படம் எடுத்துள்ளது. இந்த செல்பி படம¢ இணைய தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவின் விக்கிமீடியா காமன்ஸ் தளத்தில் இடம்பெற்றுள்ளது. விக்கிமீடியா காமன்ஸ் பகுதியில் உள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட படங்களை யார் வேண்டுமானாலும் இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். புகைப்படத்துடன், அதை எடுத்தவரின் பெயரையும் விக்கிமீடியா வெளியிடும். இந்த செல்பி படத்தில், மனிதர்களால் எடுக்கப்படாத புகைப்படம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படம் உலகெங்கும் பல கோடி பேரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட படம் என்பதால் தனக்கே பதிப்புரிமை உள்ளது. என்னுடைய அனுமதியில்லாமல் வெளியிட்டதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஸ்லேட்டர் கோரியுள்ளார். ஆனால் குரங்கு தன்னைத் தானே எடுத்துக் கொண்டதால் உரிமை குரங்குக்குதான் உண்டு என்று விக்கிபீடியா கூறியுள்ளது. இந்த புகைப்படத்தை இலவசமாக வெளியிட்டதால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஸ்லேட்டர், விக்கிபீடியா மீது நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார். |
Thursday, 7 August 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment